அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இன்று நடைபெறுகிறது.  ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே உள்ள வீலர் தீவில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.  


1) ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா 35-வது உறுப்பினராக சேர்ந்தது. ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பானது (எம்டிசிஆர்), ஜி-7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றால் 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள், குறிப்பாக குறைந்தது 500 கிலோ எடையுடன் 300 கி.மீ. பறந்து சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் மூலம் உயர் தொழில்நுட்பங்களைப் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

2) அக்னி 5 ஏவுகணையானது ஒரு டன் எடையுள்ள அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக்கூடியது. பாகிஸ்தான், சீனா உள்பட ஆசிய நாடுகளையும், ஐரோப்பிய நாடுகளையும் இலக்காக கொள்ளும் வல்லமை கொண்டது.
3) 17.5 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. 
அக்னி-5 ஏவுகணை தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. 

4) சாலை மார்க்கமாக நகரும் ஏவு வாகனத்தில் இருந்து விண்ணில் செலுத்தும் வகையில் ஏவுகணை உருவாக்கப்பட்டு இருக்கிறது. சாலை மார்க்கமாக கொண்டு சென்று இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை எதிரி இலக்கை நோக்கி ஏவமுடியும்.

5) இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன. அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்கவல்லவை. இந்த வரிசையில் அக்னி-5 ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.


6)  அக்னி-5 ஏவுகணையை இந்தியா ‘சாமாதானத்திற்கான ஆயுதம்’ என்று விளக்கிஉள்ளது. 
7) துப்பாக்கியில் இருந்து கிளம்பும் புல்லட்டை விட வேகமாக பாய்ந்து செல்லக்கூடியது.

8) ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அக்னி 1 ஏவுகணையானது கடந்த 1989-ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது.

9) இதன் தொடர்ச்சியாக  2 ஆயிரம் கி.மீ. தூரமும் சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தும் அக்னி-2 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. அதனையடுத்து சோதனை செய்யபப்ட்ட அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்கவல்லவை.

10) இவ்வரிசையில் அக்னி- 6 ஏவுகணையை கட்டமைக்கும் பணியானது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இருக்கும். இந்த ஏவுகணையை நீர் மூழ்கி கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது 8000 முதல் 10000 கி.மீட்டர் வரையில் சென்று தாக்கும் வல்லமையுடன் தயாரிக்கப்படுகிறது.


கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. அந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து இருக்கிறது. ஏற்கனவே அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்திஉள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment