எதிரி நாட்டின் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை திட்டம் நேற்று காலை ஒரிசா மாநிலம், அப்துல்கலாம் தீவில் நடைபெற்றது. இந்த திட்டம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டியதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும், "இந்த சோதனையானது இந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு மைல்கல் என்று தெரிவித்துள்ளார். சோதனையை வெற்றிகரமாக நடத்தியதில் பங்குபெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
0 comments:
Post a Comment